2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலை தோட்ட செய்கைக்கான விதைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு பாடசாலை தோட்டத்திற்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்கமான அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பாடசாலைகளுக்கு பாடசாலை தோட்டம் செய்கைக்கான விவசாய விதைகள் மற்றும் உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடியிலள்ள சிவானந்தா தேசிய பாடசாலை,; கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயம், திருப்பெருந்துறை விநாயகர் வித்தியாலயம், இந்துக்கல்லூரி, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இந்த விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகரச சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா இதனை வழங்கி வைத்தார்.

இந்த வைபவத்தில் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .