2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மற்றும் சொறுவாமுனை வாவியிலிருந்து சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இச்சட்டவிரோத மீன்பிடி வலைகள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமென மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பாவித்து ஏறாவூர் வாவியில் மீன்பிடிக்கும் நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெறுவதை அறிந்தே இவ்வாவியில் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளபோதிலும், வலையின் உரிமையாளர்கள் எவரும் இச்சுற்றிவளைப்பின்போது அகப்படவில்லை. எனினும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணையின்போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்திய கடற்றொழிலாளர்கள் அகப்படலாமெனவும் அவர் கூறினார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றில் தங்கூஸ், டிஸ்கோ மற்றும் இழுவை வலைகளே பெரும்பாலும் உள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .