2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து பார்வை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவரும் மக்களின் உடனடித் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுசெல்லவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற இவர்,  அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அரசாங்கத்தால் அதிகளவான தொகை செலவிடப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் அவற்றின் முழுமையான பயனும் மக்களைச் சென்றடைவதில் பிரச்சினைகள் உள்ளன. அபிவிருத்திகள் குறித்து மக்களின் ஆலோசனைகள் பெறப்படாமையே இதற்கு காரணமாக உள்ளன.

மக்களது உடனடித் தேவைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து ஜனாதிபதிக்கு சரியாக அறிவிக்கப்படாத நிலைமை காணப்படுகிறது. இந்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் உருவாகும்' என்றார்.

கடந்த 3 நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, போரதீவு, அரசடித்தீவு, பன்குடாவெளி, ஆயித்தியமலை,  சிப்பிமடு ஏறாவூர்ப்பற்றின் கொம்மாதுறை, வந்தாறுமூலை, சித்தாண்டி  உள்ளிட்ட பல பகுதிகளுக்கும்; ஜனாதிபதியின் ஆலோசகரும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து சென்று அங்குள்ள வெள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.

இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செலாளரும்  ஏறாவூர்ப்பற்று பிரதேச ஜனாதிபதி இணைப்பாளருமான ஏ.கைலேஸ்வரராஜா, விளையாட்டுத்துறை அமைச்சரின் மட்டக்களப்பு இணைப்பாளர் ஜெயக்குமார், மட்டக்களப்பு மாநகசபை உறுப்பினர் ராஜேந்திரப் பிரசாத், பன்குடாவெளி - கரடியனாறு பிரதேச இணைப்பாளர் சீனு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 
அத்துடன், வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களையும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற முடியாதுள்ளவர்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளையும் அவர் கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உதய சிறிதர் உட்பட வெள்ளப் பாதிப்பிற்குள்ளான பிரதேச செயலாளர்கள் மற்றும்  கிராம அலுவலர்களையும் இவர் சந்தித்து கலந்துரையாடி அங்குள்ள நிலைமை கேட்டறிந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .