2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாநகர சபை ஊழியர்களின் ஆளணியை குறைத்தமையால் ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர், ஊழியர்களின் ஆளணியை 412இல் இருந்து 358ஆகக் குறைத்தமையினால் ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலையினை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கே.தவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றிவரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஆளணி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக 412ஆக இருந்தது.

கடந்த 1.01.2013 முதல் அமுலுக்கு வரும் வகையில் அவ் ஆளணியானது, 358ஆக உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமாரினால் குறைக்கப்பட்டுள்ளது.

எமது மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சனத்தொகை குறைவாக உள்ள காலகட்டத்தில் எமது மாநகர சபை ஆளணி 412ஆக இருந்தது.
தற்போது மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். ஒரு இலட்சத்துககும் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து செல்கிறார்கள்.

வியாபார ஸ்தலங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குடிமனைகள் அதிகரித்துள்ளன, வடிகான்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலைகள் அதிகரித்துக் காணப்பபடுகின்றன. 

எல்லைப்பிரமாணமும் விஸ்தரிக்கப்பட்டு குடிமனைகளும் அதிகரித்துக் காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆளணி போதாது என பல தவடைவகள் பல தீர்மானங்கள் அனுப்பியும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாது தவறை விளைவித்துவிட்டு கடந்த 1.01.2013இல் இருந்து அமுலுக்கு வரும் வகையில் ஆளணி எண்ணிக்கை 358 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இவ் ஆளணிக்குத் தகுதியுடைய உத்தியோகத்தரகள்;, ஊழியர்களுக்கு மாத்திரம் வேதன மீளளிப்பு வழங்கப்படும் என உள்ளூராட்சி ஆணையாளரால் பணிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் மனச் சோர்வடைந்து காணப்படுகின்றனர். இவ்விடயத்தில் தாங்கள் மிக விரைவான கவனம் எடுத்து எமது ஊழியர்கள், பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சீர்செய்து குறைக்கப்பட்ட 78 ஆளணியினரையும் மீளவும் தந்து உதவுவதுடன் எமது மாநகர சபை மக்கள் ஊழியர்களின் வாழ்வுக்கு உதவும் படி தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .