2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'பொலிஸ் நிலையங்கள், அரச அலுவலகங்களில் ஊழல் அதிகமாக இடம்பெறுகின்றன'

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


இலங்கையில் பொலிஸ் நிலையங்களிலும் அரச அலுவலகங்களிலுமே ஊழல்; அதிகமாக காணப்படுவதாக ஊழலை தடுப்பதற்கான சட்ட ஆலோசனை எனப்படும் நேர்மையின் புகலிடம் அமைப்பின் சிரேஷ்ட முகாமையாளர் ஸான் விஜேதுங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பூம்புகாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'ஊழல்களின் பட்டியலில் இலங்கை 76ஆவது இடத்தில் இருக்கின்றது. இலங்கைக்கு 34 புள்ளிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 100 வீத புள்ளிகளைக் கொண்டு 50 வீதத்திற்கு மேல் புள்ளிகளைப்பெற்றால் அந்த நாட்டில் ஊழல்கள் ஒழிக்கப்பட்ட நாடாக கருதமுடியும். இதில் இலங்கைக்கு 34 வீத புள்ளிகளே வழங்கப்பட்டன.

இலங்கையில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் ஊழல்கள் காணப்படுகின்றன.

வைத்தியசாலைகளில் கூட ஊழல், இலஞ்சம் காணப்படுகின்றன. மோட்டர் போக்கு வரத்து பொலிஸார் சிலர் இலஞ்சம் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் ஊழலுக்கெதிராக சட்ட ஆலோசனைகளை வழங்க ஆயத்தமாகவுள்ளோம்.  இதில் காணி தொடர்பாகவும் சட்ட ஆலாசனை தேவைப்படுபவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

ஊழல் என்பது உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களை தனது சொந்த இலாபம் கருதி துஷ்பிரயோகம் செய்தல் எனப்படும். ஊழலில் பல்வேறு வகைகள் உள்ளன. இலஞ்சம், சொத்துக்களை மோசடி செய்தல், மோசடி, மற்றும் பலாத்கரமாக கையகப்படுத்துதல், தேவைகளின் முறன்பாடு, முறையற்ற பக்க சார்பு, உறவுச்சலுகை, உள்ளக வியாபாரம் இரகசிய விபரங்களை தவறான முறையில் பிரயோகித்தல் போன்றவற்றை ஊழல் என குறிப்பிடமுடியும்.

இது தொடர்பாக எமது நேர்மையின் புகலிடத்துக்கு வரும் முறைப்பாடுகளை சட்ட நடவடிக்கைகளுக்கு கொண்டுசெல்ல சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றோம்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திற்கு எழுத்து மூல முறைப்பாட்டை மேற்கொள்ள நாம் வழிகாட்டுகின்றோம்.

பல்வேறு வகையான ஊழல் தொடர்பில் சமூகத்தின் அவதானத்தை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஊழலுக்கெதிராக செயற்படுவதில் பொதுமக்களின் பொறுப்பு மற்றும் வகை கூறல் தொடர்பில் அவர்களை அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம்.

அரச நிறுவனங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தக்க வகையில் அவசியமான இயலுமையை அந்நிறுவனங்களுக்கு பெற்றக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்கின்றோம் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இதில் சட்ட ஆலோசகர் எப்.வி.எஸ்.விஜயகுமார் உட்பட அதன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X