2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

துறைநீலாவணை கிராம மக்களின குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணைக் கிராமத்தில் மிக நீண்ட நாட்களாக காணப்பட்டுவந்த குடிநீர் பிரச்சினைக்கு தற்போது நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கும் துறைநீலாவணைக் கிராம மக்களுக்கு  இடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பு நடைபெற்றது.

துறைநீலாவணைக் கிராமத்தில்  காணப்படும் பிரச்சினைகளை ஆராயும்; வகையிலும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலுமே இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, துறைநீலாவணைக் கிராமத்தில் இதுவரை காலமும்  தீர்க்கப்படாமலிருந்துவரும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் அந்தக் கிராம் மக்கள் தன்னிடம் எடுத்துக்கூறியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மேலும், துறைநீலாவணைக் கிராமத்திற்கு இதுவரை காலமும் அம்பாறை மாவட்டத்திலிருந்துதான் குடிநீர் விநி;யோகம் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வராத்தில் ஒரு நாள்; மட்டும்தான்  கிடைக்கக்கூடியதாக அமைந்திருந்தது எனவும் தன்னிடம் துறைநீலாவணைக் கிராம எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறினார்.

இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டதை கொண்டு இது தொடர்பில் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன்,  துறைநீலாவணைக் கிராமத்திற்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து அல்லாது  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒவ்வொரு நாளும் குடிநீர் வழங்குவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து   நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .