2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மும்முரம்

Kogilavani   / 2013 ஜூலை 23 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய ஏதுவான சூழலைக் கொண்டுள்ள இடங்கள் பொதுமக்களின் பங்களிப்புடன் சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை டெங்கு நுளம்புத் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுப் பிரசாரங்களும் கிராமங்கள் தோறும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பயிலுநர் அலுவலர் சோமசுந்தரம் சிவகலா தெரிவித்தார்.

வெருகல் பிரதேசமெங்கும் பாடசாலை மாணவர்களிடையேயும் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் கிளினிக்குக்கு வரும் நோயாளிகள் ஆகியோருக்கு டெங்கு அபாயம் குறித்த விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வெருகல் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன் மற்றும் வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி ஆகியோரின் வழிநடத்தலில் இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெருகல் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதன் முறையாக டெங்கு நோயாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில் செய்யும் இவர்கள் விடுமுறையில் வெருகல் பிரதேசத்திற்கு திரும்பியிருந்த வேளையிலேயே இவர்களுக்கு டெங்கு நோய் பீடித்திருப்பது கண்டறியப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X