2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டு. புதுக்குடியிருப்பு கிராமத்தில் சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கிராமத்தில் சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் 14 மாவட்டங்களில் அன்றையதினம் நடைபெறவுள்ள சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை நிகழ்வு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 7 அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் 7ஆவதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதை மையப்படுத்தி புதுக்குடியிருப்பு கிராமத்தில் இந்த சுனாமி அனர்த்த முன்னாயத்த ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இந்த ஒத்திகை நிகழ்வில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், கிராம மக்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுனாமி அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது எவ்வாறு மக்களும் அதிகாரிகளும் நடந்து கொள்ள வேண்டும் என்பது இந்த ஒத்திகையின் மூலம் செய்து காட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .