2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சமாதானப்பேரவை செயலமர்வில் ஏற்பட்ட குழப்பம் சுமுகமாக தீர்த்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ரிவேரா விடுதியில் சமாதானப் பேரவையினால் நடத்தப்பட்ட செயலமர்வில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட செயலமர்விலேயே குழப்பம் ஏற்பட்டது.

இந்த செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கான வழிமுறைகளும் எனும் தலைப்பில் நடைபெற்றது. இதன்போது அங்கு குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பான இரு சாராரினதும் வாக்குமூலங்களை பதிவு செய்த காத்தான்குடி பொலிஸார் இப்பிரச்சினை தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

இதன்போது இரண்டு சாராரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றுமையாக செல்ல விரும்பியதன் காரணமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து சுமுகமாக இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .