2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போஷாக்கு உணவு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


மட்டக்களப்பு வாழைச்சேனையில் போஷாக்கு உணவு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஊர்வலமும் மற்றும் கண்காட்சியும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, பாரம்பரிய உணவுகள் மற்றும் கனியுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் போஷாக்கு உணவு தயாரித்தல், உட்கொள்வதன் அவசியம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் தாய்ப்பாலூட்டல், குடும்பத்திட்டமிடல், உள நலத்துறை,  சிறுபிள்ளை பராமரிப்பு, அபிவிருத்தி, கழிவுப் பொருட்களைக் கொண்டு பசளை தயாரித்தல், வீட்டுத் தோட்டம் செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
தொற்றா நோய் பரிசோதனையும் இங்கு இடம்பெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.திசநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாகாண சுகாதார பிரதிப்பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், வாழைச்சேனை வைத்திய அதிகாரி எஸ்.தடச்சணாமூர்த்தி, தாய்சேய் நல வைத்திய அதிகாரி ஈ.சிறிநாத் மற்றும் உலக தரிசனம் முகாமையாளர் பீ.றோகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான நிதி அனுசரணையை உலகதரிசனம் நிறுவனம் வழங்கியது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .