2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மாபெரும் தொழில் சந்தை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் மனிதவலு அபிவிருத்திப் பிரிவினால் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சனையினைக் கருத்தில் கொண்டு இன்று மாபெரும் தொழில் சந்தை ஒன்று நடத்தப்பட்டது.

வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலக கணக்களார் இ.கார்த்திகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்;, மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடய தனியார்  நிறுவனங்கள் கம்பனிகள் போன்றவைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இங்கு கலந்து கொண்டிருந்த உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளினாலும், தனியார் கம்பனிகள் மற்றும் நிறுவனங்களின்  அதிகாரிகளினாலும் அவர்களது அமைப்புக்களிலுள்ள வெற்றிடங்கள் பற்றியும் அதில் வேலைவாய்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. 

'இதன்மூலம் இந்தப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகள் அதிகம்போர் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்பம் உருவாகியுள்ளது' என போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் மனிதவலு அபிவிருத்திப் பிரிவு தெரிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X