2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தியாகம் செய்தவர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைக்கவேண்டும்: ஏ.எம்.நௌபர்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

'நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் நினைவாக நினைவுத் தூபி ஒன்று கட்ட வேண்டும்' என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் பிரேரணை ஒன்றினை சமர்பித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 31ஆவது அமர்வு பிரதேசசபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்படி பிரேரணையை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் சமர்பித்து உரையாற்றினார்.

இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று ஒரு சில சிங்கள அமைப்புக்களின் தலைவர்கள் நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தில் முஸ்லிம் சமுகம் எந்த விதப் பங்களிப்பையும் செய்ய வில்லையென்று அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

'எமது நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலினால் முடிவுற்று நாட்டில் உள்ள அனைத்தின மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகுத்துள்ளது.

இந்த பயங்கரவாதத்தை ஒழித்து நிறந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவத்திலும் பொலிஸிலும் முஸ்லிம்கள் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்பதனை ஜனாதியுதியும் பல சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்தி உள்ளார்.

ஆனால் இன்று ஒரு சில சிங்களத் தலைவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தில் முஸ்லிம் சமுகம் எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லையென்று அப்பட்டமாக பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

இதனை பாமர சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் நம்பி முஸ்லிம்கள் தவரானவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

முஸ்லிம்களும் இந் நாட்டுக்காக தியாகம் செய்யதவர்கள் என்பதை தெளிவு படுத்தவேண்டியது அரசியல்வாதிகள் என்ற வகையில் எமது பொருப்பாகும்.

அந்தவகையில் கல்குடாத் தெகுதியில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸில் இருந்து உயிர்த் தியாகம் செய்தவர்கள் நினைவாக நினைவுத் தூபி ஒன்றை அமைத்து அதில் அவர்களது பெயர்களையும் குறிக்க வேண்டும்' என்றார்.

பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபரது பிரேரணை ஏகமானதாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் நினைவுத் தூபியை நாவலடி (திருக்கொண்டியாமடு) சந்தியில் அமைப்பதென்றும் இது தொடர்பாக பிரதேசத்தில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டம் என்றும் தீர்மானிக்கப்படடுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X