2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலாவதியான உணவுகளை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களையும் காலாவதியான உணவுப் பொருட்களையும் வைத்திருந்ததாகக் கூறப்படும் 5 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்; ஏ.எம்.றபீக் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காத்தான்குடியில் உள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் ஆகியவற்றில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போதே, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களும் காலாவதியான உணவுப் பொருட்களும்  கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்போது 2 களஞ்சியசாலைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 2 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்; செய்யப்பட்டுள்ளதுடன், காலாவதியான பொருட்களையும் பாவனைக்கு உதவாத பொருட்களையும் வைத்திருந்ததாகக் கூறப்படும் 3 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்; ஏ.எம்.றபீக் கூறினார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .