2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரான் பகுதியில் மிதந்து வந்த கைக்குண்டு மீட்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
கிரான் விஷ்ணு கோயிலின் பின்புறமாக உள்ள கேணி (நீரோடை) ஒன்றிலிருந்து மிதந்து வந்த கைக்குண்டை படையினர் இன்று (07) கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த கைக் குண்டு சொப்பிங் பை ஒன்றினுள் சுற்றி பொதி செய்யப்பட்ட நிலையில் மேற்படி கேணியில் மிதந்து வந்துள்ளது.
 
இதனைப் பொதுமக்கள் கண்டு தம்மிடம் தெரிவித்ததன் பேரில் தான் படையினருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்ததாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவையாளர் என். ரவீந்திரன் தெரிவித்தார்.
 
புதைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டு தற்சமயம் வெள்ள நீர் பரவுவதால் நிலத்திலிருந்து மேலெழுந்து மிதந்து வந்திருக்கலாம் என்றும் இது போர்க்காலத்தின் போது புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் படையினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .