2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'சுபீட்சம் மிகு கிராமத்தை நோக்கி' வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட 'சுபீட்சம் மிகு கிராமத்தை நோக்கி' எனும் 180 நாள் வேலைத்திட்டம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகி தெரிவித்தார்.

இப்பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்திக்கு மறைமுக பின்னடைவை ஏற்படுத்தும் சமூக, பொருளாதாரக் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை தீர்த்து வைக்கும் முகமாக இவ்வேலைத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து  முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய அடையாள அட்டை  இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகள்  பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.   வாக்காளர் இடாப்பின்படி இன்னும் 465 பேருக்கு அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளன. 
அத்துடன், மத அனுஷ்டானங்களின் படி  திருமணம் செய்தவர்களில் திருமணச் சான்;றிதழ் இல்லாதவர்களுக்கு திருமணச்; சான்றிதழ்களும் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கு காணி உறுதிகளும்  பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக வாழ்வாதார உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இவ்வேலைத்திட்டத்தின் மற்றுமொரு திட்டமான 'சமூக கருத்திட்ட முகாம்'  ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணி தாட்டமடு, பால்சேனை, பனிச்சங்கேணி ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று குடும்பங்களின் பிரச்சினைகள்  மற்றும் தேவைகளை கேட்டறிந்துகொள்கின்றனர். அத்துடன், பிரச்சினைகளுள்ள வீடுகளுக்கு குடும்ப அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த அட்டைகளை வைத்திருப்பவர்கள் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறும் நடமாடும் சேவைகளுக்கு வருகை தந்து தங்களது பிரச்சினைகளை  தீர்த்துக்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .