2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய திட்டத்தின் கீழ் திவிநெகும சந்தைகள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்


சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு நாடெங்கிலும் பல்வேறு நிகழ்கள் நடைபெற்றுவருகின்றன. இதனையொட்டி  திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் சந்தைகள் திறந்துவைக்கப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(6) மட்டக்களப்பில் ஆரம்பமாகின.

இதன் கீழ் முதலாவது திவிநெகும சந்தை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஓந்தாச்சிமடத்தில் திறந்துவைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  வறிய மக்கள் சித்திரைப்புத்தாண்டில் குறைந்த செலவில் பொருட்களை கொள்வனவுசெய்யும் வகையிலும், திவிநெகும பயனாளிகள் தமது பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் இந்த திவிநெகும புத்தாண்டு சந்தைகள் திறந்துவைக்கப்படுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த புத்தாண்டு சந்தைகள் திறந்துவைக்கபப்படுகின்றன.

இந்த நிகழ்வில், திவிநெகு சந்தை திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி பணிப்பாளர் கே.குணரெட்னம் கலந்துகொண்டார்.

பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் கு.சுகுணன்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி  சத்தியகௌரி தரணிதரன் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .