2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் விபத்துக்களை தடுக்கும் செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில்  விசேட செயற்றிட்டமொன்றை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில்,  'கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம்',  'சட்டத்தை மதிக்கும் சாரதிகளை அன்புடன் வரவேற்கிறோம்' ஆகிய விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் எழுதப்பட்ட பலகைகள் மட்டக்களப்பு நகரிலும் கல்லடிப் பாலத்திற்கு உட்பட்ட  பகுதியிலும் இந்த வாரம் இடப்பட்டுள்ளன.

ஆசியா பௌண்டேஷன் மற்றும் ஈ.எஸ்.சி.ஓ. ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு  பொறுப்பதிகாரி சமன் குமார ஆகியோரின் ஆலோசனையில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .