2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொற்றா நோய்களை குறைப்பது குறித்து கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

உயர் இரத்த அழுத்தம்,  மாரடைப்பு,  நீரிழிவு,  போன்ற தொற்றா நோய்களை குறைப்பதற்கு,  ஜெய்க்கா நிறுவனம்   'நான்காண்டு  திட்டம்'  ஒன்றை வகுத்துள்ளது. இந்த திட்டத்தை  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று வைத்திய அத்தியட்சகர்  கு. சுகுணன் தலைமையில் மேற்படி வைத்தியசாலையின்   கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண  சுகாதரா பணிப்பாளர்  வைத்தியர் க. முருகானந்தன் , பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எஸ். சதுர்முகம் ஜெய்க்கா நிறுவன திட்ட முகாமையாளர் வைத்தியர் தேவராஜ், தொற்றா நோய் பொறுப்பதிகாரி வைத்தியர். நவலோஜிதன், மட்டக்களப்பு சுகாதார திட்டமிடல் அதிகாரி வைத்தியர். கஸ்தூரி, மற்றும்  ஜப்பான் நாட்டில் இருந்து  வருகைதந்த ஜெயிக்கா  நிறுவனத்தின்  நான்கு  வைத்திய அதிகாரிகளும்  கலந்து  கொண்டனர்.

மேலும் களுவாஞ்சிகுடி வைத்திய சாலையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் மற்றும் சுற்றாடலையும் ஜெய்க்கா  நிறுவனத்தின் வைத்திய குழுவினர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த  வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் கடந்த 2011ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார். 

அவர் பதவியேற்று  ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குள் அவர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இக்குறித்த வைத்தியசாலை பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .