2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்வி நிலையை ஆராயும் விசேட கூட்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் திருப்பழுகாமம் கண்டுமணி வித்தியாலயத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றது.

பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுக்கோட்ட கல்வி வலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது

இதன்போது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினையும், ஆசிரியர் பற்றாக்குறையினையும், தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடலில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், பிரதிக்கல்விப்பணிப்பாளர் அன்னநவபாரதி, போரதீவுப்பற்று கோட்ட கல்விப்பணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X