2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாழைச்சேனை கலை வாணி கலா மன்ற விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலை வாணி கலா மன்றத்தினால் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் விழா மன்ற அரங்கில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.

கலை வாணி கலா மன்றத் தலைவர் சு.சுதர்ஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குருக்கள் முரசொளிமாறன், புதுக்குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி.சாந்தினி குமாரவேல், புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் எஸ்.மோகனராசா, புதுக்குடியிருப்பு மாதர் சங்கத் தலைவி திருமதி. மெத்தியேஸ் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், சாயமுட்டி உடைத்தல், தலையணைச் சமர், வலைப்பந்தாட்டம் உட்பட பல போட்டிகள் நடாத்தப்பட்டு அதில்  வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாளை உட்பட்ட பிரதேச பாடசாலைகளில் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள், சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்கள் மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்று பல்கலைக் கழகம் சென்றவர்களுக்கு பாராட்டி அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சித்தி பெற்ற 56 மாணவர்களுக்கான கௌரவிப்பு விருதுகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனின் அனுசரணையில் வழங்கப்பட்டன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X