2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நிதியத்தினால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்புரிக் கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு நலன்புரிக் கொடுப்பனவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நிதியத்தில் அங்கத்தவராக உள்ள ஒருவரின் இயற்கை மரணத்திற்கான கொடுப்பனவு முன்னர் 25000 ரூபா வழங்கப்பட்டது. தற்போது இக்கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கத்தவரின் திருமணமாக பிள்ளை மரணித்தால் முன்னர் 5000 ரூபா வழங்கப்பட்டது. தற்போது இது 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவரின் பிள்ளையை முதலாம் ஆண்டுக்கு பாடசாலையில் அனுமதிப்பதற்கு முன்னர் 500 ரூபா வழங்கப்பட்டது. தற்போது இக் கொடுப்பனவு ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கத்தவர் ஒருவரின் அவசர இடர் கொடுப்பனவாக முன்னர் 1000 ரூபா வழங்கப்பட்டது. இக் கொடுப்பனவு 2000 ரூபாவாக அதிகரிக்கக்கப்பட்டுள்ளது.

அங்கத்தவர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 7 நாட்களுக்கு மேல் இருந்தால் ஒரு நாளுக்கு 200 ரூபா வீதம் ஒரு மாத்திற்கு வழங்கப்பட்டது.

தற்போது இக்கொடுப்பனவு 3 நாட்களுக்கு அல்லது அதற்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் அங்கத்தவருக்கு நாளொன்றுக்கு 500ரூபா வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சைக்கான கொடுப்பனவை போதுமானளவு பெறமுடியும்.

இதுதவிர ஏற்கனவே இக் கொடுப்பனவு வழங்கப்பட்ட ஏனைய விடயங்களுக்கான அதே கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக முன்னர் அங்கத்தவர் ஒருவரிடமிருந்து மாதாந்தம் 50 ரூபா மாத்திரம் அறவிடப்பட்டு வந்தது.

தற்போது மே மாதத்திலிருந்து இதற்காக அங்கத்தவர் ஒருவரிடமிருந்து 150 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X