2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குருக்கள்மடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் சனியன்று பொலிஸில் புகார்

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், நாளை மறுதினம் சனிக்கிழமை (05), காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபையில் வைத்து இந்த முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

1990ஆம் ஆண்டு, குருக்கள் மடத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட  காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு செல்வது சிரமமாக உள்ளது என்பதை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தான் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த முறைப்பாடு செய்யும் நடவடிக்கையை காத்தான்குடி நகரசபையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குருக்கள் மடத்தில் வைத்து கடத்திக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், முறைப்பாடுகளை செய்ய முடியும் எனவும் இந்த நடவடிக்கை இரண்டு, மூன்று தினங்களுக்கு இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் மூவர் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1990ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்திக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித புதைகுழி, எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X