2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுபோக செய்கை பாதிப்பு : விவசாயிகள் கவலை

Kanagaraj   / 2014 ஜூலை 03 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிவிலுள்ள புணானை மேற்கில் காணப்படும் விவசாய நிலங்களுக்கு போதியளவு நீர் வசதி இல்லாத காரணத்தினால் இவ்வருட சிறுபோக விவசாயச் செய்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுமார் 5500 ஏக்கர் பரப்பளவிலான வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா ஸ்ரீ லங்கா விவசாய சம்மேளனத் தலைவர் ஜ.எல்.எம்.முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

மினுமினுத்தவெளி மேற்கு, மினுமினுத்தவெளி கிழக்கு, அக்குறானை, கிளச்சிமடு, பொத்தானை, கொடுவாமடு, மயிலந்தனை, புணானை போன்ற இடங்களிலே பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாதுறு ஓயா வடிச்சல் நீரினை அணைக்கட்டி இவ் வேளான்மை செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும்  அவர் கூறினார்.

ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.எம்ஹீஸ்புல்லா ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த வாரம் நீர் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை எனவும் போதுமானவளவு நீர்வசதிபெற சம்பந்தப்பட்ட அமைச்சு முன்வரவேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .