2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

Kanagaraj   / 2014 ஜூலை 03 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


கிரான் பிரதேச செயலாளர் பிரிலுள்ள பொத்தானை அணைக்கட்டு மீள்குடியேற்ற கிராமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும்  காணிக்குரிய தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பிரதேச செயலாளரின் அனுமதியினை பெற்று மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டமொன்று பொத்தானை கிராமத்திலுள்ள முகைதீன் ஜிம்மா பள்ளி வாசல் முற்றத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.

இதன் போது மாவட்ட வனவள பணிப்பாளர் ஏ.டி.பிரசாத், உதவி மாவட்ட வனவள பணிப்பாளர் எம்.ஏ.நபீஸ், பிரதேச செயலக காணி உத்தியோகஸ்;தர் .ச.நிமலநாதன், மற்றும் இராணுவ உயர் அதிகாரி மேஜர் சமரநாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்தனர்.

இப்பிரதேசங்களில் புதிதாக சட்டவிரோதமாக காணிகளை மீள் குடியேற்ற நடவடிக்கைக்கு பயன்படுத்த முயற்சிப்பது  நிறுத்தவேண்டும். வனத்தில் உள்ள மரங்கள் வெட்டுவதையோ மிருகங்களை வேட்டையாடுவதையோ நிறுத்தவேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மற்றும் காடுகளை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். என்று கோரிக்கைகள் பல வன வள திணைக்கள அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .