2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாகரை பிரதேச வேல்ட் விஷன் நிறுவனமும், வாகரை பிரதேச செயலகமும் இணைந்து வாழ்வின் எழுச்சித் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வியாழக்கிழமை(4) வழங்கி வைத்தது.
 
இதன்போது, வேல்ட் விஷன் வாகரைப் பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பிரிவினரால் வீட்டுத் தோட்ட நடவடிக்கையில் ஈடுபடும் 300 பயனாளிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக் கூடு கட்டுவதற்கான நிதியும், பயிற்சிகளும் வழங்கப்பட்டு, கூட்டினை பூர்த்தி செய்தவர்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது.
 
இந்நிகழ்வானது பச்சாக்கேணி, பால்சேனை மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய கிராமங்களில் முதல் கட்ட நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான நிதியினை கொய்கா, வேல்ட்விஷன் கொரியா போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
 
இச்செயற்பாடுகள் யாவும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகியின் ஆலோசனை, வளிப்படுத்தல் மூலம் வேல்ட் விஷன் நிறுவன உத்தியோகத்தர்களாலும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .