2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொத்தானை -புணானை மீளக்குடியமரும் பிரச்சினைக்கு தீர்வு

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன், எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொத்தானை -புணானை அணைக்கட்டு பிரதேசத்தில் முஸ்லிம் விவசாயக் குடும்பங்கள மீளக்குடியமரும் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பாரிய சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கையை அடுத்தே அனைத்து குடும்பங்களும் அவர்களது பூர்வீக இடத்தில் மீளக்குடியமர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொத்தானை பிரதேசத்தில் நடை பெற்ற விNஷட கூட்டத்திலேயே உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இராணுவ உயரதிகாரிகளும் பிரசன்னமாயிருந்த இக் கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிதேச பள்ளிவாசல் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

புணானை அனைக்கட்டு பகுதியை அன்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த 150 முஸ்லிம் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டுகால அசாதாரண சூழ்நிலையின்போது இடம் பொயர்ந்தனர.; இவர்கள் கிரான் பிரதேச செயலகத்தின் அங்கீகாரத்திற்கிணங்க மீளக் குடியமர்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தவேளை வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டனர்.

இவ்விவகாரம் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அவர், கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வனபாதுகாப்பு உயரதிகாரிகளுடன் பேசினார். இதன் பயனாக இடம்பெயர்ந்த நிலையிலுள்ள குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இடம்பெயர்ந்துள்ள 150 குடும்பங்களில் 84 குடும்பங்கள் முதற்கட்டமாகவும் ஏனையவர்கள் அடுத்தடுத்த கட்டங்களிலும் குடியமர கிரான் பிரதேச செயலகம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .