2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பன்புல் பாய் உற்பத்தி செயன்முறை பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பாடசாலைக் கல்வியை முடித்த தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்கு பன்புல் பாய் உற்பத்தி  செயன்முறை பயிற்சி காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள விதாதாவள நிலையத்தில் இரு தினங்களாக நடத்தப்பட்டது.

காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு, ஆரையம்பதி, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள  விதாதாவள நிலையங்கள் இணைந்து தி;ங்கள்  (13)  செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் இப்பயிற்சியை நடத்தியது.

இப்பயிற்சியில் 57 யுவதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் விதாதாவள நிலையத்தால்,  மாவட்டத்தின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழிலான பன்புல் பாய் உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு பன்புல் பாய் உற்பத்தி தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

காத்தான்குடி பிரதேச செயலக விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் கே.சுதாகர்,  விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களான  எஸ்.வளர்மதி, திருமதி எஸ்.நிரஞ்சன், திருமதி எஸ்.அகிலன் ஆகியோரின் மேற்பார்வையுடன் இப்பயிற்சி நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X