2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'அமெரிக்காவுடன் புதிய அரசாங்கம் செயற்பட்டால் உதவிகள் தொடரும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 29 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படும் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட விரும்பினால், இலங்கைக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று  இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பணியகத்துக்கான இரண்டாம் நிலை அதிகாரி ஜோசப் ஸ்கெல்லர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு செவ்வாய்க்கிழமை (28) மாலை விஜயம் செய்த  ஜே.ஏ.ஜோசப் தலைமையிலான குழுவினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நிலைமை தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்புக்கு செவ்வாய்க்கிழமை (28) மாலை விஜயம் செய்த  ஜோசப் ஸ்கெல்லர்  தலைமையிலான குழுவினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நிலைமை தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் நிலைமை தொடர்பில் கேட்டறிந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் அலுவலகத்தில் நாம் திராவிடர் கட்சி உறுப்பினர்களுக்கும்  இந்தக் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இம்முறை தேர்தலில் நாம் திராவிடர் கட்சி சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நிலைமை மற்றும் நாம் திராவிடர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் தொடர்பில் இந்தக் குழுவினர் கேட்டறிந்துகொண்டனர்.

இங்கு மேலும் தெரிவித்த ஜோசப் ஸ்கெல்லர், 'ஜனநாயகமான தேர்தல் நடைபெறுமா என்பதை அமெரிக்கா கண்காணித்து வருகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் எந்தப் பெரிய கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது. அதன் காரணமாக சிறிய கட்சிகளின் ஆதிக்கம் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையேற்படும்.

அத்துடன், திருகோணமலையிலிருந்து சந்திப்புகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அனைவரிடமும் உரையாடியதன் அடிப்படையில் நிதியொதுகீடுகள் சமத்துவமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவருகின்றது' என்றார்.

'மேலும், வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அமெரிக்க அரசாங்கம் யு.எஸ்.எய்ட் ஊடாக பல்வேறு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை கருத்திற்;கொண்டு வடக்கில் ஆணி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இங்கு திடமான பொருளாதாரத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும். எதிர்காலத்தில் அமையப்போகும் நல்ல அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட விரும்பினால் இலங்கைக்கு அமெரிக்க தொடர்ந்து உதவிகளை வழங்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X