2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாக்காளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நல்லாட்சிக்கான அரசை தெரிவுசெய்வதில் வாக்காளரை தெளிவூட்டும்; வேலைத்திட்டத்தை  தேசிய சமாதானப் பேரவை சிவில் சமூகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஐ.மனோகரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப நாட்டின் நலன் கருதி நல்லாட்சிக்கான அரசை தெரிவுசெய்வதில் வாக்காளரை தெளிவுபடுத்தல் காலத்தின் தேவையாகும்' என்றார்.  

நல்லாட்சியை ஏற்படுத்துவதில் சிவில் சமூகத்துக்கு முக்கிய பங்கு உண்டு என்ற அடிப்படையில் தேசிய சமாதானப் பேரவையும் சிவில் சமூகமும் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமாதானத்தை நோக்கிய நல்லாட்சியை உருவாக்கும் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அதிகளவான சிவில் சமூகக் குழுக்கள் நல்லாட்சிக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முன்னின்று உழைத்தன. அதேபோன்று, தற்போதும் மேலும் பொறுப்புணர்ச்சியுடனும் அவதானத்துடனும் செயற்பட்டால்; இலஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனை, கொலை, கடத்தல் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்குடன் சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .