2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுவாஞ்சிகுடியில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளவர்களுக்கான காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை ஆரம்பமாகியது.

இன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்த 324பேர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் தனித்தனியே விசாரணைகள் செய்யப்பட்டதுடன் அவர்களின் சாட்சியங்களும் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டன.

ஆணைக்குழு உறுப்பினர்களான டபிள்யு.ஏ.ரி.ரட்ணாயக்க, எச்.சுமணபால, மணோகரி ராமநாதன், சுரண்ஞனா வித்தியாரட்ண ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்தவர்கள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் ஆணைக்குழுவின் அமர்வுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஹெலி தெரிவித்தார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை 315 பேர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஆணைக்குழுவின் அமர்வு இடம் பெறவுள்ளது.

இதில் திங்கட்கிழமை 225 பேரும் செவ்வாய்க்கிழமை 187 பேரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெறும் ஆணைக்குழுவின் அமர்வின் போது புதிய விண்ணப்பங்களும் ஆணைக்குழு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .