2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு பல்கலை 21இல் ஆரம்பிக்கப்படாது: உபவேந்தர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும்  திங்கட்கிழமை (21)  ஆரம்பிக்கப்பட மாட்டாதென அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில்  ஏற்பட்ட முறுகல் மற்றும் கைகலப்பு காரணமாக  சகல கல்விசார் நடவடிக்கைகளும் கடந்த மார்ச் 25ஆம் திகதியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டன.

இப்பல்கலைக்கழகத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும்  திங்கட்கிழமையிலிருந்து  (21) மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்று  எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும்;, சில தவிர்க்க முடியாத காரணங்களால் கல்விசார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 4ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு   உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விஜயம் செய்தார். இவரின்  தலைமையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்; கிழக்கு பல்கலைக்கழகத்தின்   கல்விசார் நடவடிக்கைகளையும் திங்கட்கிழமை (21) ஆரம்பிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும்,  மாணவர்களுக்கான பல்கலைக்கழக விடுதி வசதி பற்றாக்குறையால் குறித்த திகதியில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் நிலவுவதாகவும்  உபவேந்தர் கூறினார்.

கற்றல்,  கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகத்தை  திறந்துவிடுவது தொடர்பில்  செவ்வாய்க்கிழமை (22)  தனது தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் பெரும்பாலும்  முதலாம்  மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்விசார் நடவடிக்கைகளை  எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .