2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுளம்புகள் பரவும் வகையில் கிடந்த 24 வெற்றுக்காணிகள் பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாவற்குடா பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் கவனிப்பாரற்று கிடந்த  24 வெற்றுக்காணிகளை மட்டக்களப்பு  மாநகரசபை பொறுப்பேற்றுக்கொண்டதாக  அம்மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட காணிகளில் 'இக்காணி மட்ஃமாநகரசபைக்குச் சொந்தமானது' என்று பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாவற்குடா பிரதேசத்தில் 30 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில், அங்கு  டெங்கு பரிசோதனையை மட்டக்களப்பு மாநகரசபை திங்கட்கிழமை (31), செவ்வாய்க்கிழமை (01) ஆகிய தினங்களில்  மேற்கொண்டன.

இந்நிலையிலேயே டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் கவனிப்பாரற்று கிடந்த  24 வெற்றுக்காணிகளும் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மேற்படி பிரதேசத்தில் நுளம்புக்குடம்பிகள் காணப்பட்ட 47 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்  தெரிவித்தார்.

100 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு மற்றும் வீட்டுச் சூழலை  துப்பரவு செய்வதற்கு அறிவித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.
ஏனையோருக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது, 2,000 இற்கும் மேற்பட்ட வீடுகளில்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு மட்டக்களப்பு மாநகரத்தை டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .