2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமரர் வணசிங்க ராஜாவின் 25வது நினைவு தினம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்.

அமரர் டி.எஸ்.கே.வணசிங்காவின் 25வது நினைவு தினம் முன்னாள் தமிழர் ஆசிரியர் சங்க தலைவர்களால் மட்டக்களப்பு மஹாஜனாக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை(6) அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நினைவு தின நிகழ்வில், அஞ்சலி உரைகளை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் த.மகாசிவம்,  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவருமான சி.தண்டாயுதபாணி, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க முன்னாள் வட்டாரச் செயலாளர் கலாபூசணம் பொன் தவநாயகம் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து அமரர் டி.எஸ்.கே.வணசிங்காவின் நினைவுகளை சுமந்த நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் வெளியீட்டு உரையினை திருமதி றூபி வெலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

அமரர் வணசிங்க , இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் துனைத் தலைவராக இருந்து ஆசிரிய சமூகத்துக்கும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் துணைத்தலைவராக இருந்து மட்டக்களப்பு சமூகத்திற்கும் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்து மாணவர் சமூகத்திற்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார்.






































You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .