2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மழையினால் மட்டு மாவட்டத்தில் 26,723 ஏக்கர் பாதிப்பு

Super User   / 2011 ஜனவரி 08 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடச்சியாகப் பெய்துவரும் மழையினால் 26,723 ஏக்கர் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள்  உதவி ஆணையாளர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.

பழுகாமம் கமநல சேவைகள் கேந்திர நிலயத்திற்குட்பட்ட பிரிவில் 930 ஏக்கரும், வெல்லாவெளிப் பிரிவில் 1135 ஏக்கரும்,, மண்டூர் பிரிவில் 1,335 ஏக்கரும், தாந்தாமலை கமநல சேவைகள் பிரிவில் 558 ஏக்கர் வேளான்மைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தடி பிரிவில் 1,336 ஏக்கரும், வாழைச்சேனைப் பிரிவில் 6,960 ஏக்கரும், வாகரையில் 902 ஏக்கரும், ஏறாவூர் கமநல கேந்திரப் பிரிவில் 390 ஏக்கரும், பாதிக்கப் பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கரடியனாறு பிரிவில் 1,150 ஏக்கரும், கொக்கட்டிச்சோலையில் 945 ஏக்கரும், கிரான் பிரிவில் 5185 ஏக்கரும், பாதிப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வந்தாறுமூலை பிரிவில் 4,450 ஏக்கரும், கல்லடி பிரிவில் 175 ஏக்கரும், ஆரயம்பதி  பிரிவில் 85 ஏக்கரும், களுவாஞ்சுகுடியில் 65 ஏக்கரும், கமநல கேந்திரப் பிரிவில் 420 ஏக்கரும் பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சேதமடைந்த வயல்களில் 11,955 ஏக்கர் 50 தொடக்கம் 80 வீதம் வரையான அழிவுகளையும், 14768 ஏக்கர் வயல்கள் 80 வீதத்திற்கும் கூடுதலான அழிவையும் சந்தித்துள்ளதாகத் தெரிவித்த ஆர்.ருசாங்கன் மொத்த அழிவு 26,723 ஏக்கர் என்றார்.

அத்துடன் மாவட்டத்தின், 28 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும,; மண்டபத்தடிப் பிரிவில் 9 குளங்களும், தாந்தாமலைப் பிரிவில் 8 குளங்களும், வாகரையில் 2 குளங்களும், கரடியனாறு பிரிவில் 6 குளங்களும், கிரான்பிரிவில் 7 குளங்களும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .