2024 மார்ச் 28, வியாழக்கிழமை

3 மணித்தியாலங்கள் மன்முனை வாவியில் தத்தளித்த பயணிகள்

Super User   / 2011 மார்ச் 01 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)

கொக்கட்டிச்சோலை துறையிலிருந்து மன்முனை துறை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை சென்ற இயந்திர பாதையின் இயந்திரம் பழுதடைந்ததில் மூன்றரை மணித்தியாலயங்கள் மன்முனை வாவியில் பயணிகள் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்று காலை 6.30 மணிக்கு 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு கொக்கட்டிச்சோலை துறையிலிருந்து மன்முனை துறை நோக்கி பயணித்த வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இயந்திர பாதையின் இயந்திரம் நடு வாவியில் வைத்து பழுதடைந்துவிட்டது.

இதையடுத்து பாதையில் பயணித்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

பின்னர் இயந்திரம் பழுது பார்க்கப்பட்டு காலை 10 மணிக்கு மன்முறை துறையை வந்தடைந்தது.

இவர்களுக்காக மன்முனை துறையிலும் கொக்கட்டிச்சோலை துறையிலும் பெருமளவிலான பொதுமக்கள் காத்துக்கொண்டு நின்றனர்.

பாடசாலை ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நான்கு மணித்தியாலங்களாக துறையோரம் காத்து நின்றனர்.

கொக்கட்டிச்சோலை துறைக்கும் மன்முறை துறைக்குமிடையில் சுமார் பத்து நிமிடமே பாதையில் மக்கள் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X