2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 50,000 மரக்கன்றுகள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், சுக்ரி)

ஜனாதிபதியன் பிறந்ததினம்  மற்றும் இரண்டாவது பதவியேற்பு வைபவங்களையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 11 நிமிடங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த மரநடுகை வைபவம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் விஜயவர்த்தன உட்பட பெருமளவிலான உயர் பொலிஸ் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். பொலிஸ் திணைக்கள ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலும் மரநடுகை வைபவங்கள் இடம்பெற்றன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்ற இந்த மரம் நடும் வைபவங்களின் பிரதான வைபவம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மீள்குடியேற்ற பிரதேசமான கொடுவாமடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை வைபவங்களில பிரதியமைச்சர் வி.முரளிதரன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், அரசியல் பிரமுகள்கள் உட்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .