2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் தைது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடை உடைப்பு மற்றும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்ததாகத் தெரிவிக்கப்படும்  இளைஞர்கள் 6 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தெரிவித்தார்.

கடைகள் உடைத்தமை,  வீதிகளில் செல்வோரின் தங்கச் சங்கிலிகளை அறுத்துச் சென்றமை, வீடுகளை உடைத்து கொள்ளையிட்டமை போன்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் உரியவர்கள் முறைப்பாடு செய்ததாகவும் இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே  இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும்  த.சாந்தகுமார் கூறினார்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி றஞ்சித் வணராஜாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவினர் இந்த தீவிர விசாரணையினை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட பொருட்களை இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரஞ்சித் வணராஜா மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சகிதம் பார்வையிட்டார்.
மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.சவுண்ஸ் சேவிஸ் நிலையத்தை கடந்த 15ஆம் திகதி இரவு உடைத்து ஒரு இலட்சத்து எண்பத்தொன்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும்  5 பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து  பொருட்கள் மீட்கப்பட்ட    நிலையில் 3 பேர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, வீதியில் தங்கச் சங்கிலிகளை அறுத்துச் சென்ற  மட்டக்களப்பு பாரதி வீதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட இருவரையும் கைதுசெய்ததுடன், மட்டக்களப்பு பூம்புகார் வீதியில் வின்சன் உயர்தர தேசிய பாடசாலை மாணவியிடமிருந்தும் சென் மைக்கல்ஸ் பாடசாலைக்கு முன்னால்  பல்கலைக்கழக மாணவியிடமிருந்தும் இவர்களால்  பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளும்    மீட்கப்பட்டன.  இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  பதில் நீதவான் வினோபா இந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்போது எதிர்வரும் 07ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்பிற்காக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏ.ரி.எம். காட்டைத் திருடிய வாடகை வாகன சாரதியை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து குறித்த ஏ.ரி.எம். காட்டூடாக மோசடி செய்த இரண்டு இலட்சத்து நாற்பதனாயிரம் ரூபாய் பணத்தினையும் காட்டையும் மீட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 04 October 2011 12:01 PM

    குற்ற செயல்களில் ஈடுபவர்கள் பலர் முன்னாள் போலீஸ்,பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்களாக இருப்பதன் மர்மம் என்ன?

    Reply : 0       0

    hamaza Tuesday, 04 October 2011 04:39 PM

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .