2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மழையினால் இறால் வளர்ப்பில் ஈடுபட்ட 60 குளங்கள் பாதிப்பு

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  அடை மழையினால் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் இறால் வளர்ப்பில் ஈடுபட்ட 15 பேரின் அறுபது குளங்கள் வெள்ள நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார். 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 60,000  தொடக்கம் 65,000 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் நீரினால்  மூடப்பட்டுள்ளதாக மட்டு. மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாந்தன் தெரிவித்தார்.

வெள்ள நீர் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வயல் நிலங்களில் தேங்கி  நிற்கும் பட்சத்தில் நெற் செய்கை பாதிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .