2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘அனைத்து அபிவிருத்திகளும் தடையின்றித் தொடரும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிரதேச அரசியல்வாதியால் முடக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தங்கு தடையின்றித் தொடருமென உறுதியளித்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், இவ்வருட இறுதிக்குள் ஏறாவூர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி இயங்கத் தொடங்குமென்றும் தெரிவித்தார்.

தொடங்கப்பட்டு, முடிவுறாமல் அரைகுறையாகக் காட்சியளிக்கின்ற ஏறாவூர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியை சந்தை வியாபாரிகளின் அழைப்பின் பேரில், இன்று (10) நேரில் சென்று பார்வையிட்ட அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில், “ஏறாவூர் நவீன சந்தை சட்டப்படியான எல்லா நடைமுறைமைகளையும் பின்பற்றி மாகாண சபை மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அனுமதியோடும் 193 மில்லியன் ரூபாய் நிதியோடும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தால் கட்டுமான வேலைகள் தொடக்கி வைக்கப்பட்டன.

“ஆயினும், பிரதேச அரசயில்வாதி தனது வங்குறோத்து அரசியலைப் பயன்படுத்தி, இந்தப் பிரதேசத்தின் ஒட்டு மொத்த அபிவிருத்திகளையும் கேள்விக்குட்படுத்தினார்.

“எனினும், இப்பிரதேச அபிவிருத்திகள் இனித் தங்கு தடையின்றி தொடரும். தொழில்நுட்ப வளாகம், கிழக்கு மாகாண மக்களுக்கான நவீன வைத்தியசாலை, கைத்தொழில் பேட்டைகள், நவீன சர்வதேச ஆடைத் தொழிற்சாலைகள் என்பன அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X