2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அனர்த்தத்துக்கு அஞ்சாதீர்கள்’

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், பைஷல் இஸ்மாயில், துஷாரா

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமை தொடர்பில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனரென, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலையைப் போக்கும் வகையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இதுவரையில் சுனாமி அனர்த்தமோ, சூறாவளி அனத்தமோ ஏற்படுவது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை.

“இது தொடர்பான அரச அதிகாரிகளுடான அவசர கலந்துரையாடலொன்று, மாட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் மாவட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், முப்படையின் உயர் அதிகாரிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

“கரையோங்களில் வசிப்பவர்களை விழிபுணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் “ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டள்ளது. எந்தவொரு அனர்த்தம் ஏற்பட்டாலும் அதற்கான நடிவடிக்கைகளில் ஈடுபடும் படி, பிரதேச சபைகள், பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

“குறிப்பாக, கடல் தொழில்களில் ஈடுபடுபவர்கள், அறிவித்தல் வழங்கும் வரை கடற் தொழில்களில் ஈடுபடாமல் இருக்கவும்.

“அறிவித்தல்கள் கிடைக்கும் பட்சத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும். மக்கள் இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .