2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அனல் வெப்பக் காற்றால் தீப் பரவல் குடிசை எரிந்து நாசம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஒரு சில நாட்களாக வீசிவரும் பலத்த கச்சான் காற்றால் (தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று) மரக்கிளைகள் முறிந்து விழுவதும், புழுதி வாரி இறைக்கப்பட்டும் வந்த நிலையில், நேற்று (12) நண்பகலளவில் வீசிய பலத்த அனல் வெப்பக் காற்றால், மீராவோடை தமிழ்ப் பிரிவு 10ஆம் குறுக்கில் ஓலைக் குடிசையொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தான் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென வீசிய பலத்த அனல் வெப்பக் காற்றால் குடிசை தீப்பற்றியதாக, சபாபதிப்பிள்ளை கோமளம் (வயது 57) தெரிவித்தார்.

அவ்வேளையில், அக்கம்பக்கதிலுள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாகவும், கூலித் தொழில் செய்து வாழ்வாதார் நடத்தும் தான் மிகுந்த வறுமை நிலையிலுள்ளதாகவும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மகள் உட்பட இரண்டு பெண் மகள்களுடனும் தானும் குடும்பமும் இந்தக் குடிசையில் வசித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X