2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆரையம்பதி ஒள்ளிக்குளத்தில் பாரம்பரிய உணவு கண்காட்சி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒள்ளிக்குளத்தில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, இன்று (13) நடைபெற்றது.

ஆரையம்பதி விவசாய போதனாசிரியை திருமதி எம்.ஐ.முபீதாவின் ஏற்பாட்டில் ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்தப் பாரம்பரிய உணவு கண்காட்சியை, ஆரையம்பதி பிரதேச செயலாளார் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மத்திய உதவி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாய பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராஜா மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் உட்பட விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த பாரம்பரிய உணவுக் கண்காட்சியில் அரிசி மாவால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பலகார வகைகள், இடியப்பம், ரொட்டி, பிட்டு உட்பட பல பாரம்பரிய உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

கோதுமை மாவின் பாவனையை குறைத்து அரிசி மாவாலான பாரம்பரிய உணவு உற்பத்தியை ஊக்குவித்து, மக்களை சுகதேகியாக வாழ வைக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், விவசாய திணைக்களத்தால் இக்கண்காட்சி நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .