2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கைவிரல் பதிவு அவசியமில்லை; கற்றலுக்கே முன்னுரிமை’

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தமது வரவை பிரத்தியேகப் படிவத்தில் பதியவேண்டுமெனவும் மாறாக கைவிரல் பதிவையோ, வழமையான வரவுப் பதிவேட்டிலோ பதியவேண்டிய அவசியமில்லையெனவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

அதேவேளை, கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கவேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், “அதிபர் முகாமைத்துவக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த வாரம் தயாரிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு இணங்க ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்காக, அனைவரும் பிற்பகல் 3.30 மணிவரை நிற்கவேண்டும் என்பதில்லை. அதேபோல் அனைவரும் காலை 7.30க்கு வரவேண்டுமென்பதுமில்லை” என்றார்.

“இது தொடர்பான பூரண விளக்கம் இதுவரை வழங்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அதிபர்கள் நன்குவாசித்து அதன்படி நடத்தல் வேண்டும்.

“மேலும், ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வந்தாலும் வகுப்பறையினுள் அதை அணிய வேண்டிய கட்டாயமில்லையெனத் தெரிவித்த அவர், சுகாதார நடைமுறைகளின்படி கைகழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் என்பன கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .