2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் கிராம உத்தியோகத்தர்களுக்குத் திண்டாட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

18 கிராம உத்தியோகத்தர்களைக் கொண்ட காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் தற்போது 10 கிராம உத்தியோகத்தர்களே உள்ளனரென, காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனால், வெற்றிடமாகக் காணப்படும் ஏனைய 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் இந்த கிராம உத்தியோகத்தர்களில் இருந்து 8 பேர் பதில் கடமையாற்றி வருகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த சில வருடங்களாக இந்த வெற்றிடம் நிலவி வருகின்ற நிலையில் கிராம உத்தியோகத்தர்களுக்கான போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு, நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை அவர்களுக்கான நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 5 சமுர்த்தி  அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வெற்றிடம் காணப்படுவதால் இதற்கு 5 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதில் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X