2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘கொமிஷன் பெறுவதற்காக நகரசபையைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“நகர சபைப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கட்டட நிர்மாணங்களைச் செய்து கொண்டு, கொந்தராத்துக் கொமிஷன் எடுப்பதற்காகவோ மக்களின் வரிப் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதற்காகவோ திட்டம் தீட்டிக் கொண்டு, நாம் நகர சபைத் தேர்தலில் களமிறங்கவில்லை” என, ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அறபா வட்டார வேட்பாளர் முஹம்மத் சறூஜ் தெரிவித்தார். 

ஏறாவூரில், அறபா வட்டாரத்தில், திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் உரையாற்றினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

“மாற்று அரசியல் தலைமைத்துவம் இல்லாததால், ஏறாவூர் நகர பிரதேசம் நீண்ட காலமாக ஒரு மாயையான அரசியல் பிடிக்குள் சிக்கியிருக்கின்றது. முதலில் இந்தத் துரதிர்ஷ்ட நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். 

“அதன் பின்னரே, பிரதேச மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, முழுமையான சேவை செய்ய முடியும். இதனை முன்னுதாரமாகச் செய்து காட்டவே நாம் அரசியலுக்குள் நுழைந்துள்ளோம். 

“நகர சபையைக் கைப்பற்றுவதன் மூலம் எதனை வரப்பிரசாதமாக அடைந்து கொள்ளலாம் என்று ஒரு சாரார் திட்டம் தீட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் மக்கள் சார்ந்த அரசியல் வியூகமாகும்.

“ஏறாவூரில் செய்து முடிக்கப்பட வேண்டிய எத்தனையோ காரியங்களை, இதுவரை காலமும் கோலோச்சிய அரசியல் தலைமைகள் செய்து தரவில்லை. 

“எதிர்வரும் காலங்களில், ஏறாவூரில் நாம் புதிய அரசியல் சரித்திரத்தை நிலைநாட்டுவோம்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .