2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சிறார்களைக் காப்பாற்றுங்கள்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளுக்கு அடிமையாவதிலிருந்தும்  பாடசாலை இடைவிலகலிலிருந்தும் சிறார்களைக் காப்பாற்றுங்கள் என, ஏறாவூர் பிரதேச சமூகத்திடம் தான் உருக்கமான வேண்டுகோளை முன்வைப்பதாக, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய நலின் ஜயசுந்தர தெரிவித்தார்.

இவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தால் பிரியாவிடையும் சேவை நலன் பாராட்டும், சம்ளனத்தின் தலைவர் எம்.எல். அப்துல் வாஜித் தலைமையில், ஏறாவூர் சம்மேளன அலுவலகத்தில் நேற்று (17) இரவு நடைபெற்றது.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நலின் ஜயசுந்தர, இளைய சமுதாயத்தினர், இளம் பருவத்திலேயே பாடசாலைக் கல்வியைக் கைவிடுவார்களாயின், அவர்களின் வாழ்க்கை தடம்புரள்வதற்கான முதலாவது பின்னடைவாக அது இருக்கும். பாடசாலைக் கல்வி இடைநிறுத்தப்பட்டால் அதற்குப் பிறகு செய்வதற்கு ஒன்றுமே இல்லையென்றார்.

எந்தவொரு சமூகத்திலும் எதிர்கால சந்ததியினரான இளைஞர்கள் முக்கியம். எனவே, அவர்களைப் பாதுகாத்து நாட்டுக்கு வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டியது சமுதாயத்திலுள்ள ஒவ்வொருத்தர் கடமையாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .