2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சில்வெஸ்டருக்கு கௌரவப் பட்டம்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளது ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராகப் பணியாற்றிய சொலமன் பசில் சில்வெஸ்டருக்கு, சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவின மக்கள், அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகங்களை ஒருங்கிணைத்தமை மற்றும் மனிதநேயப் பணியில் ஈடுபட்டமைக்காக, அவருக்கு இந்தக் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு விபுலானந்தா இசை - நடனக் கல்லூரியில், கடந்த வாரம் நடைபெற்ற இதற்கான நிகழ்வின் போது, எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகம் - லண்டன், பொசிடிவ் நெகடிவ் பாத் பல்கலைக்கழகம், சர்வதேச எச்சரிக்கை மற்றும் வறுமை ஆராய்ச்சி நிலையம் - இலங்கை, மார்டீன் சத்துரற்றி ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்தக் கௌரவப் பட்டத்தை வழங்கின.

இதற்கான அனுசரணையை, ஈ எஸ்.ஆர்.சி பொருளாதார மற்றும் சமூக ஆய்வுக்கான மன்றம், கலை மற்றும் மனிதாபிமான ஆய்வு மன்றம் ஆகியன வழங்கியுள்ளன.

இப்பட்டத்தை, லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழக அபிவிருத்திக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் ஜொனததன் குட்கான்ட், பாத் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் அரசியல் விஞ்ஞான அலகின் கலாநிதி ஒலிவர் வால்ரன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

இவ்வைபவம், 2016/2017ம் ஆண்டில் இலங்கை, நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் நடத்தப்பட்டு, அதன் பிரகாரம் இக்கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.

சில்வெஸ்டர், யுத்த காலத்தில் ஆற்றிய பணி மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது என்ற அடிப்படையில், இக்கௌரவப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்கௌரவப் பட்டம், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இலங்கையர் ஒருவருக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .