2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செங்கலடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜூன் 14 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று, “பிள்ளைகளின் சுற்றுச் சூழலை, மதுபானத்திலிருந்தும் சிகரெட் புகையிலிருந்தும் விடுவிப்போம்” எனும் கருப்பொருளில், செங்கலடியில் இன்று (14) நடைபெற்றது.

மட்டக்களப்பு, செங்கலடி வாழ்வின் எழுச்சி சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றமும் ஏறாவூர்பற்று பிரதேச செயலகமும் இணைந்து, இந்த விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

செங்கலடி சமூர்த்தி அலுவலக முன்றலில் ஆரம்பமாகிய பேரணி, செங்கலடி பிரதான வீதியினூடாக பதுளை வீதி சந்திவரை சென்று, பின்பு பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

வழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், “புகைத்தலின் அபாயத்தை ஒழித்து, வறுமை நிலையைக் குறைத்து, அபிவிருத்தியை மேம்படுத்துவோம்”, “சிகரெட் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை, நமது நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம்”, “புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம்”, “ஒழுக்க நெறி நிறைந்த, சுபீட்சமான கிராமத்தைக் கட்டி எழுப்புவோம்” போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .