2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சௌபாக்கியா வீடுகள் மக்களிடம் ஒப்படைப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா விசேட விடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை, மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, இன்று (13) நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், காகிதநகர் பகுதியில் 4 வீடுகளும், மாஞ்சோலை பிரதேசத்தில் 3 வீடுகளுமாக 7 வீடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், மக்களின் இரண்டு இலட்சம் ரூபாய் பங்களிப்பு மூலமும் நிர்மானிக்கப்பட்ட வீடுகளே, மக்களின் பாவனைக்கு வழக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமுக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சாஜகான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எம்.என்.சியாத், ஏ.எல்.எம்.நியாஸ், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .