2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாடசாலைகளைப் புனரமைக்க அமெரிக்கா நிதியுதவி

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜூலை 09 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பணியகத்தால், கிழக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட்ட இரண்டு பாடசாலைகள், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டன.
இலங்கைக்கான ஐ.அமெரிக்கத் தூதரகத்தின் ஊடகக் கல்வி மற்றும் கலாசார அலுவல்களுக்கான பணிப்பாளர் ஜேம்ஸ் எல்.ரூஸ்ஸோ தலைமையில், புனரமைக்கப்பட்ட இப்பாடசாலைகள், மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.

காவத்தமுனை அல்-அமீன் பாடசாலை புனரமைப்புக்கு, 47 மில்லியன் 7 இலட்சத்து 10 ஆயிரத்து136 ரூபாயும், அப்துல் காதர் பாடசாலைக்கு 49 மில்லியன் 3 ஆயிரத்து 492 ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் கிழக்கு மாகாண கல்வியமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் பரிந்துரைக்கமையவே, இந்தப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X